Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை வழக்கு: தமிழச்சி கூறியதை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? ராமராஜ் வலியுறுத்தல்

சுவாதி கொலை வழக்கு: தமிழச்சி கூறியதை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? ராமராஜ் வலியுறுத்தல்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (16:00 IST)
சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றாவளி குறித்து தமிழச்சி கூறிய கருத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.


 

 
தமிழச்சி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் உண்மை குற்றவாளி இல்லை. கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
 
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ், தமிழச்சி கூறியதற்கு, சுவாதி குடும்பத்தினர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
 
அதனால் தமிழச்சி கூறிய கருத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். 
 
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 17ஆம் தேதி ராம்குமாரின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments