Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸை தடுக்கும் ஊத்தப்பம்! – கலாய் வாங்கிய கடை விளம்பரம்!

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (11:48 IST)
கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்திருக்கும் நிலையில் அதுகுறித்த போலியான தகவல்கள் மற்றும் காமெடி மீம்களும் வேகமாக பரவி வருகின்றன.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸால் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் போலியான தகவல்களும் பரவி வருகின்றனர். கொரோனா வைரஸை சித்த வைத்தியத்தால் குணப்படுத்த முடியும், நிலவேம்பு கசாயம் குடித்தால் சரியாகும் என்று நிரூபிக்கப்படாத ஃபார்வேர்டு செய்திகளை பலர் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் உணவகம் ஒன்றில் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க ஊத்தப்பம் சாப்பிட வேண்டும் என விளம்பரப்படுத்தியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கோடிக்கணக்கில் செலவு செய்து மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் 50 ரூபாய் ஊத்தப்பம் சாப்பிட்டால் சரியாகி விடும் என கூறுவது முட்டாள்தனமானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த விளம்பரத்தை பலரும் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

அடுத்த கட்டுரையில்
Show comments