Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இந்தியன் 2' ரிலீஸை கொண்டாட 5 கிலோ கற்பூரம் கொளுத்திய ரசிகர்கள்.. நடந்த விபரீதம்..!

Mahendran
வெள்ளி, 12 ஜூலை 2024 (14:12 IST)
கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் ஆனதை கொண்டாட ஐந்து கிலோ கற்பூரத்தை ரசிகர்கள் ஏற்றிய நிலையில் அது தீ விபத்தாக மாறிய சம்பவம் புதுவையில் நடந்துள்ளது. 
 
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய இந்தியன் 2 திரைப்படம் இன்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்பட ரிலீஸை கொண்டாடும் வகையில் புதுவையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு வெளியே ஐந்து கிலோ எடை கொண்ட கற்பூரத்தை கமல் ரசிகர்கள் கொளுத்தினர்.
 
அந்த கற்பூரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அருகில் இருந்த பேனரிலும் தீப்பிடித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் கற்பூரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளி தீயை அணைத்தனர்.
 
இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments