Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியின் முகட்டில் இந்தியா கூட்டணி.! ஜூன் 4-ல் புதிய விடியலுக்கான தொடக்கம்.! மு.க ஸ்டாலின் பதிவு..!!

Senthil Velan
சனி, 1 ஜூன் 2024 (11:18 IST)
ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது என்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
 
இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன என்றும் வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திவைக்க வேண்டும்.! ஓ.பி.எஸ் வலியுறுத்தல்.!!
 
ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் என்றும் இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் டெங்கு காய்ச்சல் பரவும் விகிதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை! தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரம்..!

இந்தியாவில் வெளியானது Realme 14x 5G! சிறப்பம்சங்கள், விலை நிலவரம்!

காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பிரதமர் மோடி

’விடுதலை 2’ படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனத்தை நீக்குவதா? வன்னி அரசு கண்டனம்..

அடுத்த கட்டுரையில்
Show comments