Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை: அண்ணாமலை பேட்டி எதிரொலியா?

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (08:41 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜி ஸ்கொயர் குறித்து பேட்டி அளித்த நிலையில் இன்று ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஜி ஸ்கொயர் நிறுவனம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி அண்டை மாநிலங்களிலும் இந்த தொழிலை செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்

மேலும் இந்நிறுவனத்தின் மீது அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில் திடீரென இன்று சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முதல்வரின் மருமகனுக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையில் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ஜி ஸ்கொயர் விளக்கம் அளித்திருந்த  நிலையில் இன்று திடீரென சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments