Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடி இயக்குனரின் கோமியம் குறித்த கருத்து.. அமைச்சர் பொன்முடி கண்டனம்..!

Mahendran
திங்கள், 20 ஜனவரி 2025 (10:29 IST)
நவீன மருத்துவ வசதிகள் அதிகரித்து வரும் இந்த காலத்தில் கோமியம் குறித்து ஐஐடி இயக்குனர் பேசியது கண்டனத்துக்குரியது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் நடந்த விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ’தனது தந்தைக்கு காய்ச்சல் இருந்தபோது பசு கோமியத்தை கொடுத்ததால் அவர் அவரது காய்ச்சல் 15 நிமிடங்களில் போய்விட்டது என்றும் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை பசு கோமியம் எதிர்த்து சிறந்த மருந்தாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் பொன்முடி இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்து வரும் காலத்தில் நவீன மருத்துவ வசதிகள் எல்லோரிடமும் சென்றடைய வேண்டும் என நமது முதல்வர் பாடுபடுகிறார்.

ஆனால் இது போன்ற தவறான கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது. கோமியத்தை அந்த காலத்தில் இருந்து தெளிப்பது மட்டும் தான் வழக்கம், அதை குடிப்பது வழக்கம் இல்லை, இதை ஒரு ஐஐடி இயக்குனரே கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற மூடநம்பிக்கைகளை பத்திரிகையாளர்கள் தான் தகர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராமில் புதிய அசத்தலான அப்டேட்.. ரீல்ஸ் வீடியோ பதிவு செய்பவர்கள் குஷி..!

வெள்ளை டீ சர்ட் இயக்கம்.. இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு..!

ஐஐடி இயக்குனரின் கோமியம் குறித்த கருத்து.. அமைச்சர் பொன்முடி கண்டனம்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

சட்டவிரோத கல்குவாரி.. தட்டிக் கேட்டவர் லாரி ஏற்றிப் படுகொலை! - அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments