Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடியாக பதிலளிக்க முடியாமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பேட்டியளிக்க வைப்பதா.? முதலமைச்சருக்கு ஜெயக்குமார் கண்டனம்..!

Senthil Velan
செவ்வாய், 5 மார்ச் 2024 (17:54 IST)
போதைப் பொருள் கடத்தலுக்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக இளைஞர்களை, மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க மக்கள் எழுச்சிப் போரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கியதாக தெரிவித்துள்ளார்.
 
போதை கலாச்சார சீரழிவிற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், 'டிரக் மாஃபியாக்களாக' வலம் வரும் திமுக நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி 25-ல் சேலம் பொதுக்கூட்டத்தில் தனது கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்ததை ஜெயக்குமார் சுட்டிக்காட்டி உள்ளார்.
 
பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டு ஒருவார காலம் ஆன நிலையில், எந்தவிதமான தெளிவான விளக்கத்தை, ஆளும் திமுக அரசின் சார்பாகவோ, கட்சியின் சார்பாகவோ தெரிவிக்காத நிலையில், இந்த மக்கள் விரோத அரசுக்கு பாடம் புகட்ட நேற்று தமிழகம் முழுவதும் 'போதை பொருட்கள் கலாச்சார சீரழிவை' எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை அதிமுகவினர் நடத்திக் காட்டினார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த ஆர்பாட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்க முடியாமல், ஆர்.எஸ். பாரதி மூலம் பேட்டி அளிக்க வைத்துள்ளார் என்றும் முதலமைச்சரின் இந்த செயலை கண்டிப்பதாகவும், முழுமையான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: மதுரை எய்ம்ஸ் வரும்..! ஆனால் வராது..! என்ன சொல்கிறார் அமைச்சர் ரகுபதி..!
 
தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முழுமையாக தடுக்க கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப் பொருள் பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பயன்படுத்தப்பட்டதா? அண்ணாமலை

பிரதமர் மோடி உடன் இலங்கை அதிபர் சந்திப்பு.. மீனவர் பிரச்சனை பேசப்பட்டதா?

விஜய்யின் தவெகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட மூதாட்டிகள்.. வரவேற்ற இளைஞர்கள்..!

சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி - ஆக்கிரமிப்பு கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்

வீட்டில் ஜெராக்ஸ் மிஷின் வைத்து 100 ரூபாய் கள்ளநோட்டு அடித்த நபர்.. சுற்றி வளைத்து பிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments