பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்

Webdunia
புதன், 22 ஜூலை 2015 (11:37 IST)
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார். கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உழவன் மகன், கேப்டன் பிரபாகரன், பூந்தோட்டக் காவல்காரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம் என்ற படத்தை தயாரித்தார்.
தமிழ் திரைப்பட சங்க தலைவராகவும் பதவி வகித்தார். அவரது உடல் சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ’ராவுத்தர் பிலிம்ஸ்’ அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என இப்ராகிம் ராவுத்தரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அப்டிதான் பர்சனலை இழுப்பாங்க!..விஜய் சமாளிச்சிதான் ஆகணும்!.. அண்ணாமலை பேட்டி!...

178 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து: மாநில அரசின் அதிரடி நடவடிக்கை!

காங்கிரஸ் மாநில தலைவர் திடீரென ராஜினாமா.. இக்கட்டான நிலையில் கட்சி!

ராகுல், கார்கேவை விட இவர்கள் பெரியவர்களா?.. மாணிக்கம் தாகூரை கண்டித்த செல்வபெருந்தகை...

Show comments