அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கை மந்திரியாக்குவேன் என டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. டொனால்டு ட்ர்ம்ப் - கமலா ஹாரிஸ் இடையேயான இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில், ட்ரம்ப் பல இடங்களிலும் கமலா ஹாரிசை இடதுசாரியாக சித்தரித்து பேசி வருகிறார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மிகப்பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க், தொடர்ந்து டொனால்ட் ட்ரம்பை ஆதரித்து வருகிறார். சமீபத்தில் இவரே டொனால்ட் ட்ர்ம்பை பேட்டியும் எடுத்திருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி சபையில் பதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் அதை எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்தார்.
இதுகுறித்து நேரடியாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எலான் மஸ்க் மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை அலோசகர் பதவியையோ பெற்றுக் கொள்ள வலியுறுத்துவேன் என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K