''அதிமுக ஒன்றுபட முயற்சி செய்கிறேன்!'' - கோடநாட்டில் சசிகலா கண்ணீர் மல்க பேட்டி!

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (20:15 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவரும் கோட நாடு சென்றனர். அதன்பின்னர், 2017- ஆம் ஆண்டு எஸ்டேட் பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை நடந்த பிறகு சசிகலா இங்கு வரவில்லை.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டிற்கு இன்று மாலை வருகை புரிந்தார்.

இன்று கோடநாடு எஸ்டேட்டில் தங்கும் சசிகலா , நாளை  அந்த பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

இந்த பூஜையைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில், கோடநாட்டில் செய்தியாளர்களுக்கு வி.கே. சசிகலா செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘’கோடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை பார்க்க வந்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு சூழலில் வருவேன் என நினைக்கவில்லை. கோட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜெயலலிதா தெய்வமாக இருந்து, தண்டனை பெற்றுத் தருவார் என நம்புகிறேன். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டி வந்திருக்கிறேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சி  செய்து வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும் என்றும், அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத்தர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments