Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பிணமாகத்தான் வெளியே வருவேன்: யாராலும் தேற்ற முடியாத நிலையில் இளவரசி!

நான் பிணமாகத்தான் வெளியே வருவேன்: யாராலும் தேற்ற முடியாத நிலையில் இளவரசி!

Webdunia
புதன், 24 மே 2017 (15:33 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், இளவரசியும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் இளவரசி தன்னை பார்க்க வருபவர்களிடம் அழுதுவிடுகிறாராம்.


 
 
சசிகலாவை சந்திக்க கட்சியினர், எம்எல்ஏக்கள் சிறைக்கு செல்கின்றனர். அவர்களிடம் சில அறிவுரைகளை கூறும் சசிகலா ஓரளவுக்குத்தான் தைரியமாக இருக்கிறாராம். இளவரசியை சந்திக்க அவரது குடும்ப உறவுகள் தான் வருகின்றன.
 
தன்னை சந்திக்க வரும் மகன் விவேக், பெண் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் சசிகலா அழுகிறாராம். தன்னை சுற்றி என்ன நடக்கிறது. எப்போது வெளியே வருவோம் என எதுவும் புரியாமல் மிகுந்த குழப்பத்தில் இளவரசி இருக்கிறாராம்.
 
மேலும் சிறையில் இருந்து நான் பிணமாகத்தான் வருவேன். ஒவ்வொரு நாளும் இங்கு நரகமாக இருக்கிறது. நான் என்ன தப்பு பண்ணினேன் என விவேக்கிடம் இளவரசி கதறி அழுததாக கூறப்படுகிறது. மேலும் அவங்களுக்கு சமைச்சுப் போட்டேன் அவங்க சொன்ன இடத்துல கையெழுத்து போட்டத்துக்கு இப்ப நான் அனுபவிச்சுட்டிருப்பதாகவும் இளவரசி கூறியதாக கூறப்படுகிறது.
 
இளவரசிக்கு எவ்வளவு ஆறுதல் கூறியும் அவரை தேற்ற முடியாமல் குடும்ப உறவுகள் தவிக்கிறார்கள். இரத்த அழுத்தமும் இளவரசிக்கு அதிகமாகி இரண்டு முறை சிறையில் மயங்கி விழுந்திருக்கிறார் அவர். அவரை வெளியே கொண்டு சென்று மருத்துவம் பார்க்கவும் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments