ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

Prasanth K
வியாழன், 26 ஜூன் 2025 (10:21 IST)

ராஜாஜி தமிழக முதல் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் பாதிக்கப்பட்டது குறித்து நடிகர் விஜயக்குமார் பேசியுள்ளார்.

 

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜயக்குமார் “நான் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் பள்ளிக்கூடம் படித்தபோது ராஜாஜி ஆட்சியில் குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தார். அதனால் நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

 

ஆனால் இன்று அப்படியில்லை. மதிய உணவு திட்டம் மட்டுமல்லாமல் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களில் கல்விக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு, பகல் பாராது உழைத்து வருகிறார்” என்று பேசியுள்ளார்.

 

1953ல் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ராஜகோபாலச்சாரி குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்தினார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்ற அந்த திட்டத்தின்படி, ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தினசரி 3 மணி நேரம் பள்ளிப்பாடங்களை படிக்க வேண்டும், மீத நேரம் அவர்களது பெற்றோர்களின் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட பல அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னாளில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments