Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா என் எதிரி அல்ல; அவரை எனக்கு பிடிக்கும்: மனம் திறந்த கருணாநிதி!

ஜெயலலிதா என் எதிரி அல்ல; அவரை எனக்கு பிடிக்கும்: மனம் திறந்த கருணாநிதி!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (10:57 IST)
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தனக்கு பிடிக்கும் எனவும், அவர் எனது எதிரி இல்லை எனவும் கூறியுள்ளார்.


 
 
தமிழக அரசியலில் இரு பெரும் கட்சிகள் என்றால் அது அதிமுகவும், திமுகவும் தான். அந்த இரு கட்சியின் தலைவர்களாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் எதிரிகள் போல அரசியல் செய்வார்கள்.
 
ஆனால் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதா உடல் நலம் பெற்று விரைவில் தனது பணிகளை தொடர வாழ்த்து கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதியிடம் ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவிடம் எனக்கு பிடித்த விஷயம் அவருடைய நடிப்பு மற்றும் நடனம் எனவும். பிடிக்காத விஷயம் காழ்ப்புணர்ச்சி அரசியல் என்று சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை மட்டுமல்ல யாரையுமே நான் அரசியல் எதிரியாக கருதியது இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments