Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆர் இடத்தை நிரப்பவே அரசியலுக்கு வந்தேன்: கமல்ஹாசன்

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (06:48 IST)
எம்ஜிஆர் இடத்தை அவருக்கு பிறகு வந்த எந்த தலைவரும் நிரப்பவில்லை. வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்கள், எனவேதான் அந்த இடத்தை நிரப்ப நான் அரசியலுக்கு வந்தேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
எம்ஜிஆர் ஆரம்பித்து வளர்த்த கட்சியை சேர்ந்தவர்கள் அவரது புகைப்படத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஸ்டாம்ப் சைசுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். எம்ஜிஆரை மறந்த அவர்களுக்கு பாடம் புகட்டவே நான் அரசியலுக்கு வந்தேன்
 
எம்ஜிஆருடன் இருந்தவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டார்கள். அதெயெல்லாம் பார்த்து மனம் கொதித்து கொண்டிருந்த அவரது ரசிகர்களில் ஒருவன் நான்' என்றும் கமல்ஹாசன் தெரிவித்தர்.
 
மேலும் ஒரு கட்சி ஆரம்பித்தால் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் நான் ஒரு வருடத்தில் செய்து காட்டுகிறேன் என்று கூறினேன். எம்ஜிஆர், என்.டி.ஆர், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இதை ஏற்கனவே செய்து காட்டியுள்ளனர் என்றும் கமல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments