Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரிக்காக ராஜினாமா செய்ய தயார்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி!

காவிரிக்காக ராஜினாமா செய்ய தயார்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (08:58 IST)
தமிழகம், கர்நாடகம் இடையே நிலவும் காவிரி பிரச்சனைக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயார் என தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 
 
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது எனவும் சில சட்ட சிக்கல் உள்ளது எனவும் திடீர் என தமிழகத்துக்கு எதிரான முடிவை எடுத்தது மத்திய அரசு. இதனையடுத்து தமிழகத்தில் மத்திய அரசை பலரும் விமர்சித்தனர். தனது மத்திய அமைச்சர் பதவியை பொன்.ராதாகிருஷ்ணன் ராஜினாம செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வந்தன.
 
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்சனை என்பது இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை, இதில் மத்திய அரசு தன்னால் இயன்ற அளவுக்கு தான் தலையிட முடியும்.
 
என்னுடைய ராஜினாமா மூலம் காவிரி பிரச்சனை தீரும் என்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் எனவும் அவர் கூறினார். மேலும், பட்டாசு விபத்தினால் பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டும் போதாது, அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments