Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியை நான் தான் கொன்றேன்: கொலையாளி ராம்குமார் ஒப்புதல்

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (09:13 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமாரை காவல் துறையினர் இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கைது செய்தனர்.


 
 
சூளைமேட்டை சேர்ந்த ஒரு மேன்சனில் தங்கி இருந்த ராம்குமார் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மீனாட்சி புரம் பகுதியை சார்ந்தவர். இன்று அதிகாலை காவல் துறையினர் ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
 
உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவலர்கள் செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் ராம்குமார் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
 
பின்னர் காவல் துறை ராம்குமாரிடம் நடத்திய விசாரனையில் அவர் சுவாதியை கொலை செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
மேலும் இந்த கொலை ஒருதலை காதலால் நிகழ்ந்தது எனவும், நண்பனின் உதவியுடன் இந்த கொலையை அரங்கேற்றியதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments