Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இப்படித்தான் ஏமாற்றினார்: ஆச்சார்யா அதிரடி

Webdunia
வியாழன், 5 மே 2016 (16:41 IST)
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா அதிரடியான வாதங்களை வைத்தார்.


 
 
நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடந்து வரும் விசாரணையின் இறுதிக்கட்ட வாதம் நடைபெற்று வருகிறது. இன்றுடன் இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ய்புள்ளது.
 
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் தரப்பு வாதங்களுக்கு பதில் அளித்து வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா நேற்று தனது வாதத்தின் போது ஜெயலலிதா சட்டவிரோதமாக வந்த பணத்தை அவரது தோழி சசிக்கலாவுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். பின்னர் அந்த பணத்தை கடன் என்ற பெயரில் ஜெயலலிதா திரும்ப பெற்றிருக்கிறார் என கூறினார்.
 
இப்படி சட்ட விரோதமாக வந்த பணத்தை ஜெயலலிதா சசிகலாவின் நிறுவனத்தில் கொடுத்து அந்த பணத்தை சட்டப்பூர்வ வருவாய்யாக மாற்றியுள்ளார். இதற்காகவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என ஆச்சார்யா வாதாடினார். இவரது இந்த அதிரடியான வாதம் அதிமுக தரப்பை ஆட்டம் காண வைத்திருப்பதாக பேசப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments