Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து.. அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து.. ஓசூர் அருகே பயங்கரம்..!

Siva
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (18:10 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து என அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி  தேசிய நெடுஞ்சாலை நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஓசூர் அருகே பேரண்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 8 கார்கள் நான்கு லாரிகள் மற்றும் ஒரு பேருந்து என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

அடுத்தடுத்து 13 வாகனங்கள் ஒரே சாலையில் மோதிக்கொண்டதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இந்த விபத்தில் உயிரிழந்தவர் குறித்த எந்த தகவலும் இல்லை என்பது ஆறுதலாக இருந்தாலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய நிலை என்ன என்பதை இன்னும் சில மணி நேரத்தில் மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்


Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments