Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகரிக்கும் கௌரவக் கொலைகள் : அதிர்ச்சியில் தமிழகம்

அதிகரிக்கும் கௌரவக் கொலைகள் : அதிர்ச்சியில் தமிழகம்
, திங்கள், 14 மார்ச் 2016 (18:35 IST)
அதிகரித்து வரும் கௌரவக் கொலைகளால் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 

 
‘கௌரவக் கொலைகள்’ தமிழகத்தில் இதுவரை கேள்விப்படாத ஒன்று. உச்ச நீதிமன்றத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பின் படி, இருபத்திரண்டு மாநிலங்கள் தங்களது நிலங்களில் கௌரவக் கொலைகள் அதிமாக நடக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். 
 
கௌரவக் கொலைகள் தங்களது மாநிலத்தில் எங்கும் இல்லை என்று தமிழகம் பொய்யாக பெருமையடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கௌரவக் கொலைகள் நடக்கிறதா? என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு, கௌரவக் கொலைகளுக்கும், பிற கொலைகளுக்கும் வித்தியாசத்தை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். 
 
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களால் அல்லது குலத்தினரால், தங்களது குடும்ப அல்லது குலத்தின் புனிதத் தன்மையை காக்க செய்யப்படும் கொலைகளைத்தான் கௌரவக் கொலைகள் என்று கூறுகிறோம். 99 சதவீத சம்பவங்களில், பெண்வீட்டார் தான் இது போன்ற கொலைகளில் ஈடுபடுகின்றனர். காதல் திருமணம், தகாத உறவுகள், சாதிய பாகுபாடுகள், ஒழுக்கமிண்மை மற்றும் விவாகரத்து போன்றவை கௌரவக் கொலைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. 
 
உடுமலைப்பேட்டை அருகே குமாரலிங்கம் என்ற ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்த தீயவழக்கம் தமிழகத்திலும் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த மூன்று வருடங்களில், சுமார் 81 கௌரவக் கொலைகள் அரங்கேறி உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 
 
ஆனால், இந்தக் கொலைகள் அனைத்தும் முன்பகை மற்றும் குடும்பத் தகராறு என்றே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. கட்டப் பஞ்சாயத்துகள் இது போன்ற கௌரவக் கொலைகளை ஊக்குவிக்கிறது. 2011ல் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் சட்ட ஆணையம் இந்த கௌரவக் கொலைகளை செய்பவரை தண்டிக்க தனி சட்டம் இயற்ற பரிந்துரைத்தது. 
 
ஆனால், அவர்களின் முயற்சிகளுக்கு இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. மாநிலத்தின் மகளிரை பாதுகாப்பேன் என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை இதுவரை ஒருமுறை கூட அதிமுக அரசு காப்பாற்றியது இல்லை. தனது கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் குற்றவாளிகளுக்கு கருணைக் காட்டுவதை அதிமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது.
 
தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில், மூன்று கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்தவர்களின் வழக்கில், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி தமிழக அரசு தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று எப்படி நம்புவது?

Share this Story:

Follow Webdunia tamil