மீண்டும் உயர்ந்த தக்காளி விலை! எப்போதான் குறையும்? – இன்றைய நிலவரம்!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (08:35 IST)
கிடுகிடுவென விலை உயர்ந்த தக்காளில் கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.



வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை, வெள்ளம் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. சில மாநிலங்களில் தக்காளி விலை ரூ.250 வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.140 வரை விலை உயர்ந்த தக்காளில் நாளுக்கு நாள் இருப்பை வைத்து விலை ஏற்றம் இறக்கமாக விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மெல்ல விலை குறைந்து வந்த தக்காளி இன்று ரூ.10 விலை உயர்ந்து கிலோ ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது.

தக்காளி வரத்து எப்போது சீராகும், விலை எப்போது குறையும் என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

216 கோடி செலவில் போலீஸ் ஸ்டேஷனாக மாறும் ஹிட்லரின் வீடு!..

கூட்டணிக்கு தலைமை பாஜகதான்!.. அவங்ககிட்டதான் பேசுவோம்!.. பழனிச்சாமியை பழிவாங்கிய டிடிவி!...

நீலாங்கரையில் வேலூர் நோக்கி புறப்பட்டார் விஜய்.. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான முக்கிய உத்தரவா?

திமுக கூட்டணியில் ஆளாளுக்கு ஆட்சியில் பங்கு கேட்கின்றனர்.. ஈபிஎஸ் விமர்சனம்..!

டிரம்பை கொலை செய்ய முயற்சி.. பாதுகாப்பு வளையத்தை மீறி துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர் சுட்டுக்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments