Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா கதையை இயக்கும் இயக்குனர்களுக்கு நோட்டீஸ்..

Arun Prasath
செவ்வாய், 5 நவம்பர் 2019 (12:57 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் 3 இயக்குனர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு “தலைவி” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஹிந்தியில் “ஜெயா” என்று உருவாகி வருகிறது. மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு இணையத்தள தொடரும் உருவாகிறது.

இதனிடையே “தனது அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை வெளியட அனுமதிக்க கூடாது” என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments