சென்னையை வெளுத்த கனமழை! மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பரிதாப பலி!

Prasanth K
சனி, 23 ஆகஸ்ட் 2025 (08:48 IST)

சென்னையில் நேற்று இரவு முதலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அவ்வாறாக நேற்று மாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

 

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேர்ந்துள்ள நிலையில் அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) பணிக்கு செல்ல கண்ணகி நகரில் சென்றபோது தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்தபோது அதில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து வெளியேறிய மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments