Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யும்: வானிலை ஆய்வாளர் கணிப்பு..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (15:37 IST)
சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 47 சென்டிமீட்டர் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் அடுத்த மூன்று நாட்களில் 47 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்றும், குறிப்பாக இன்று நள்ளிரவு லேசான மழை பெய்ய ஆரம்பித்து, நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.  நாளை 4.5 செமீ, நாளை மறுநாள் 26.5 செமீ,  16ஆம் தேதி 15.5 செமீ, மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், இன்று மதுரை, தேனி, விருதுநகர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மேலும் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments