இன்றும் நாளையும் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (15:54 IST)
தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் ’தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்றும் நாளையும் அதாவது ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் தென் தமிழகத்தில் உள்ள சில இடங்கள் வட தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வடதமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் தென் தமிழகத்தில் சில இடங்கள், வட தமிழகத்தில் சில இடங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments