Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்.. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:10 IST)
தமிழகத்தில் இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மாலை ஆறு மணிக்கு மேல்  விழுப்புரம், சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி  ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த ஏழு நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பரவலாக பெய்யும் என்றும் இன்று முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதால் அடுத்த வாரம் முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம்: அமலாக்கத்துறை அதிரடி..!

ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு: தவெகவின் 26 தீர்மானங்கள்..!

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தினாரா அமைச்சர் சுரேஷ் கோபி? காவல்துறை வழக்குப்பதிவு..!

ஹிஜாப் பிரச்சினை; ட்ரெஸ்ஸே போடாமல் கல்லூரிக்குள் நடமாடிய மாணவி!

விஜய் தன் மகனை பொளந்ததை போல.. சீமான் விஜய்யை பொளக்கிறார்! - சாட்டை துரைமுருகன் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments