Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:17 IST)
தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது. 
 
இந்த நிலையில்  இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்த 24 மாவட்டங்கள் பின் வருமாறு: 
 
சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, நீலகிரி, நெல்லை 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்ப அம்பேத்கர் பெயர் மடைமாற்றம்: சரத்குமார்

இன்று ஒரே நாளில் 520 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள், பாஜக மாறி மாறி போராட்டம்: பெரும் பரபரப்பு..!

ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை: விடுமுறை இல்லாததால் மாணவர்கள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments