Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (14:43 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில்  தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் திருவாரூர் கடலூர் தஞ்சாவூர் ராமநாதபுரம் புதுக்கோட்டை மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments