Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் எத்தனை பேருக்கு கரும்பூஞ்சை தொற்று? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (13:17 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பையடுத்து கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு மட்டுமே கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 7 பேர் சர்க்கரை வியாதி உள்ளவர்கள். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 9 பேரும் நலமுடன் இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் அறிமுகமாகிறது ஹைட்ரஜன் ரயில்.. ரூ.2800 கோடி ஒதுக்கீடு

நவீனமயமாகும் சென்னை வள்ளுவர் கோட்டம்.. லேசர் ஷோ காட்சிகளுக்கு திட்டம்..!

ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து: ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் அதிர்ச்சி..!

ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது?

ஒரே நேரத்தில் 9 பள்ளிகள், 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருச்சியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments