Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மாற்றுத்திறனாளிக்கு 5 வருட சிறைதண்டனை

Webdunia
திங்கள், 20 ஜூன் 2016 (17:49 IST)
நான்கு வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.


 

 
கரூரை அடுத்த காந்திகிராமம் ஈ.பி காலணியை சார்ந்தவர் சிவா. டெக்ஸ்டைல் தொழிலாளியான இவருக்கு 4 வயதில் ஒரு மகள் இரூக்கிறாள். அந்த சிறுமியை,  அதே பகுதியை சார்ந்த முனியப்பன் என்ற 50 வயது மாற்றுத்திறனாளி முதியவர் கடந்த 9.4.2014ம் தேதி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 
 
இது தொடர்பாக சிறுமியின் தந்தை சிவா பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இது தொடர்பான வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த அமர்வு நீதிபதி குணசேகரன், சிறுவர் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 
 
இதனையடுத்து குற்றவாளி திருச்சி மத்திய சிறையில் அடைக்க அடைக்கப்பட்டார்.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவிக்கு தெரியாமல் எனக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பினார்: சீமான் குறித்து விஜயலட்சுமி

வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

உதயநிதி ஸ்டாலினுடன் நேரடி விவாதத்துக்கு நான் தயார்- ஆர்.பி.உதயகுமார் சவால்

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

முதல்வர் மீது அவதூறு கருத்து: இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்