Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாளியால் கை வெட்டப்பட்ட பெண் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (08:15 IST)
சவூதி அரேபியாவில், முதலாளியால் கை வெட்டப்பட்ட பெண் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
 
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்ற வேலூர் மாவட்டம், மூங்கலேறி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் கையை அவர் பணிபுரிந்த வீட்டு முதலாளி வெட்டிய சம்பவம் மிகவும் கொடுமையானது. கண்டனத்துக்குரியது.
 
வேலை வாய்ப்பு தேடி கடல் கடந்து செல்லும் எண்ணற்ற தொழிலாளர்கள் இவ்வாறு அவர்கள் அங்கு பணி அமர்த்தப்பட்ட இடங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
அப்பாவிகளான அவர்களை மீட்டு நாடு திரும்ப வேண்டிய உதவிகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறேன். அந்த நடவடிக்கையையொட்டி சவுதி அரேபியாவில் கை வெட்டப்பட்ட கஸ்தூரி பற்றிய செய்தியை அறிந்ததும் தாய்நாடு திரும்ப உரிய அத்தனை செயல்பாடுகளையும் விரைவுபடுத்தியிருக்கிறேன்.
 
மேலும் தனது பணியாளரை பட்டினிப்போட்டு துன்புறுத்தியது மட்டுமின்றி அதுபற்றி புகார் தெரிவித்ததால் கையை வெட்டிய குற்றத்திற்காக, மேற்படியார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென கேட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments