Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தேன்டா பால்காரன்... அடடா... ஒரிஜினல் அண்ணாமலை எச்.ராஜா!!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (13:50 IST)
எச்.ராஜா, சினிமாவில் ரஜினி அண்ணாமலையாக இருக்கலாம், ஆனால் நான்தான் நிஜத்தில் அண்ணாமலை என கூறியுள்ளார். 
 
ஆடிப்பெருக்கையொட்டி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் முதல் முறையாக வைகைப் பெருவிழா 2019 என்ற மாநாட்டை மதுரையில் நடத்தி வருகிறது. 12 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த விழாவில் இன்று பசு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. 
 
இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அவர் பேசியது பின்வருமாறு, மதுரையில் பசு பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதை ஒரு சிலருக்கு பிரச்சினையாக நினைக்கின்றனர்.
சினிமாவில் வேண்டுமானால் ரஜினி அண்ணாமலையாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் நான்தான் அண்ணாமலை. மாட்டுத் தொழுவத்தில்தான் நான் பிறந்தேன். பால் விற்று கிடைத்த பணத்தில் வளர்ந்து படித்தேன். 
 
பசுவின் உடலினுள் 13000 தெய்வங்கள் உள்ளன. எனவே பசுவும் மற்ற விலங்குகளும் ஒன்றல்ல. எனவே இந்த மாநாட்டை விமர்சிப்பதை தவிர்க்கவும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments