Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை பிச்சைக்காரர்கள் என்பதா? தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (19:14 IST)
திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘கொரோனா நேரத்தில் அமெரிக்க அரசும், ஏழை நாட்டின் அரசும் பொதுமக்களுக்கு தேவையான பொருளுதவி, பண உதவிகளை தருகிறது. ஆனால் நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள். மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில் பிச்சை எடுத்து வரும் மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு மட்டுமே என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். 
 
தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது. இந்திய மக்களையும் இந்திய பிரதமரையும் பிச்சைக்காரர்கள் என்பதா? எனக்கூறி டுவிட்டரில் #பிச்சைக்காரன்_தயாநிதி என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரண்ட் ஆக்கியுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு 1.70 லட்சம் கோடி நேரடியாகவும் 15,000 கோடி சிகிச்சைக்காகவும் 12,000 கோடி மாநிலங்களுக்கும் தந்துள்ள சூழ்நிலையில் பாரத நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்றும் மக்களை காத்த பிரதமரை பிச்சை வாங்குவதாக கூறியதற்கு தயாநிதிமாறன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
 
தயாநிதி மாறன், பிச்சைக்காரர்கள், திமுக, எச்.ராஜா,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments