Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டர் சட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி: மதுரை இளைஞரின் அதிரடி புகார்

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (04:30 IST)
ஒரு போராட்டத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டித்தான் மாணவி வளர்மதியும் பேராசிரியர் ஜெயராமனும் கைது செய்யப்பட்டார்கள். அப்படி பார்த்தால் மாணவர்களின் போராட்டத்தை தூண்டியதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகள் தான். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் என மதுரை மாவட்ட கலெக்டரிடம் இளைஞர்கள் நேற்று மனு ஒன்றை கொடுத்து அதிர வைத்தார்கள்.



 
 
விவசாயிகளின் நிலம் பாதிப்பு அடையக்கூடாது என்ற பொதுப்பிரச்சனைக்காக போராடிய பேராசிரியர் ஜெயராமன், மாணவி வளர்மதி ஆகியோர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியென்றால் மதுக்கடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற  விவசாயத்தை அழிக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கும் முதல்வரை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கூடாது என்பது தான் இந்த இளைஞர்களின் கேள்வி.
 
மதுரை கலெக்டர் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பாரா? என்பது சந்தேகமே! இருப்பினும் மதுரை இளைஞர்களின் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments