Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசியது என்ன??

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (14:01 IST)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் பேசியது பின்வருமாறு... 

 
கொரோனா சூழலில் மிகவும் இக்கட்டான காலத்தில் தமிழக சட்டப்பேரவை கூடியுள்ளது.
நாட்டிலேயே அதிகம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டது தமிழகம் தான்.

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

 
மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் சமூகநீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும்.
 
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 435பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
 
தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்குவது தொலைநோக்கு பார்வையுடனான திட்டம்.
 
தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எனும் முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.
 
முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
 
தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகளை பெறலாம். அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண் 1100.
 
கொரோனா நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு இதுவரை ரூ.13208 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 
கொரோனா காலகட்டத்திலும் ரூ.60,674 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
 
காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு சூடறடிறடன குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது.
 
காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு முதல்கட்டமாக துவங்கப்படும்.
 
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவுபெறும்.
 
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து காவிரி காப்பாளன் எனும் பட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி பொருத்தமானவர் ஆகிறார்.
 
பயிர் காப்பீடு திட்டத்திற்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
 
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் அவர்களின் உரிமையை தமிழக அரசு உறுதி செய்யும்.
 
தமிழக மக்கள் இந்தியாவன் எந்த பகுதியிலும் ரேசன் கடைகளில் பொருட்களை பெற ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments