Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 மதுக்கடைகளை மூடியதன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : விஜயகாந்த் கோரிக்கை

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (14:01 IST)
சமீபத்தில் மூடிய 500 மதுக்கடைகள் பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


 

 
மதுக்கடைகளால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, உதாரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பு பட்டினப்பாக்கம் அருகில் ஏடிஎம்-ல் பணம் எடுத்து வந்த நந்தினி என்ற பெண்ணிடம் செயின் பறிப்பு, பணம் திருடுதல் போன்ற செயல்களால் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் குறிப்பாக அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், அந்த பெண்ணின் குடும்ப நிலை பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. அந்த பகுதி மக்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி உடனடியாக அப்பகுதியில் உள்ள மதுக்கடையை மூடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
 
ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் 500 மதுக்கடைகள் மூடப்படும் என கையெழுத்திட்டார், வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
 
மேலும் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் இனிமேலும் நடைபெறாத வண்ணம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments