Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் முறையில் மாற்றம்: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை

Webdunia
புதன், 8 ஜூலை 2015 (11:33 IST)
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் டேவிதார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 
 அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
பாஸ்போர்ட்டுகளை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெற்றுக்கொள்வதில் கடினமான நடைமுறை இருந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது எளிதாக்கியுள்ளது.
 
முன்னர் பாஸ்போர்ட்டை அவர்கள் பெறவேண்டுமானால், அரசுத் துறையின் ஆட்சேபணையின்மைச் சான்று, அடையாளச் சான்று போன்றவற்றை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
 
அதன்படி, பாஸ்போர்ட் கேட்டு மண்டல அலுவலகத்திடம் விண்ணப்பிப்பதற்கு முன்பதாக, அவர் பணியாற்றும் துறையின் உயர் அதிகாரிக்கு முன்னறிவிப்பு கடிதத்தை கொடுத்தால் மட்டும் போதுமானது.
 
அவருக்கு பாஸ்போர்ட் வழங்கக்கூடாது என்றால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு துறையின் உயர் அதிகாரி கடிதம் மூலம் ஆட்சேபனைகளைத் தெரிவித்து, விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுவிடலாம். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments