Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அரசுஊழியர்கள் ஆதார்எண் பெற சிறப்பு ஏற்பாடுகள்

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (03:01 IST)
சென்னையில், அரசுஊழியர்கள் ஆதார்எண் பெற சிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கருவூல கணக்குத்துறை அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, கருவூல கணக்குத் துறை இயக்குனர் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பயோ மெட்ரிக் தகவல் சேகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த மையங்கள் மூலம், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் தகவல் சேகரிக்கப்படும். பின்பு, ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், இதுவரை பதிவு செய்யாத, சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள், அதற்கான படிவங்களை வாங்கிப் பூர்த்திச் செய்து இந்த மையத்தில் அளிக்க வேண்டும்.
 
மேலும், ரேஷன் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
 
ஏற்கனவே, ஆதார் எண்ணுக்காகப் பதிவு செய்தவர்கள், தங்களது அட்டை விவரம் குறித்து அறிய, www.resident.uidai.net.in என்ற வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments