Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னிடம் நிஷா பேசவில்லை; மலரோ, முள்ளோ.... நீயா நானா கோபிநாத் உருக்கமான கடிதம்

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (14:59 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் நிஷா என்ற மாணவி, நீயா நானா கோபிநாத் தன் படிப்பு செலவை ஏற்பதாக கூறி ஏமாற்றிவிட்டார் என குற்றம்சாட்டினார். அதற்கு கோபிநாத் தற்போது உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.



 

 
அதில்,
 
சகோதரி நிஷா அவர்களின் கல்விக்காக நான் உதவி செய்வதாக கூறியது உண்மைதான். அந்த நீயா நானா நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னுடைய இமெயில் முகவரி கொடுத்து கல்லூரி கட்டணத்திற்கான ரசீதை என் இமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கும் படியும், அதற்கான காசோலையை கல்லூரிக்கும் நான் கொடுத்து விடுவதாகவும் சொல்லி இருந்தேன். நாம் கொடுக்கும் உதவித்தொகை சம்பந்தபட்டவரின் கல்விக்கு பயன்படுகிறது என்பதை உறுதி செய்துக்கொள்ள கல்லூரி கட்டண தொகையை காசோலையாக கல்லூரி பெயருக்கு கொடுப்பது நடைமுறை.
 
ஆனால் சகோதரி நிஷாவிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. சகோதரி தொலைப்பேசியில் யாருடன் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. காரணம் எனக்கு தனிப்பட்ட உதவியாளர்கள் என்று யாரும் கிடையாது. என் நிகழ்ச்சி தொடர்பாக ஒருங்கிணைக்க கூடிய பணியைக் கூட என் நண்பர்தான் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எந்த தொலைப்பேசி அழைப்பும் வரவில்லை. என்னுடைய கவனத்துக்கு வந்திருந்தால் உடனே நான் அதை செய்திருப்பேன்.
 
மலரோ, முள்ளோ எதை வீசினாலும் நீங்கள் என் அன்பிற்கு உரியவர்களே!
 
புரிந்து கொண்டமைக்கு நன்றி!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments