Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ரஜினிகாந்த் சொல்வதை போல கடவுள் ஜெயலலிதாவை கைவிட மாட்டார்’ - விஜயகுமார் மகிழ்ச்சி

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (13:12 IST)
ரஜினிகாந்த் சொல்வதைப்போல் கடவுள் நல்லவர்களை சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் என்று ஜெயலலிதா உடல்நிலை குறித்து நடிகர் விஜயகுமார் கூறியுள்ளார்.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 வாரங்களுக்கு மேலாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதற்கிடையில், ராகுல் காந்தி, அமித் ஷா, அருண் ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு உள்ளிட்ட தேசிய தலைவர்களும், வைகோ, முக.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
 
இந்நிலையில் நடிகர் விஜயகுமார் நேற்று அப்பல்லோ மருத்துவமனை வந்து அவரின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர். என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் சொல்வதைப்போல் கடவுள் நல்லவர்களை சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைந்து போயஸ் தோட்டத்து இல்லத்துக்கு வந்து பல லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments