Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்ட தேமுதிகவுக்கு கல்தா, கேட்காத வாசனுக்கு எம்பி பதவி: அதிமுகவின் அதிர்ச்சி முடிவு

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (07:38 IST)
வரும் மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் ராஜ்யசபா தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 3 எம்பி பதவி திமுகவுக்கும் 3 எம்பி பதவி அதிமுகவுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முக ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் யாருக்கும் எம்பி பதவி அளிக்காமல் திமுக வேட்பாளர்களையே மூவரையும் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்வி அரசியல் வட்டாரத்தில் இருந்த நிலையில் தற்போது அதற்கு கிட்டத்தட்ட விடை கிடைத்துள்ளது. அதிமுக வேட்பாளராக கேபி முனுசாமி, தம்பித்துரை ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான தமாக தலைவர் ஜிகே வாசன் அவர்களுக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு ராஜ்யசபா தொகுதி வேண்டும் என தேமுதிமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தேமுதிகவுக்கு கல்தா கொடுத்துவிட்டு ராஜ்யசபா எம்பி பதவியை கேட்காத ஜிகே வாசனை அதிமுக தலைமை தேர்வு செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. மேலும் இதனால் தேமுதிக பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments