Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி பயத்தால் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.. ஜோதிமணியை விமர்சனம் செய்த காயத்ரி ரகுராம்..!

Siva
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:36 IST)
கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தோல்வி பயம் காரணமாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என அதிமுக பேச்சாளர் நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் செய்தார்.

கரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய போது ’கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை, நாடாளுமன்றத்திலும் எதுவும் பேசவில்லை, தற்போது மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுவதால் அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் தனது பிரச்சாரத்தின் போது நீலி கண்ணீர் வடிக்கிறார் என்று தெரிவித்தார்.

கரூரில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்துதான் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்றும், அண்ணாமலை கோவை தொகுதிகளிலும் வெற்றி பெறப் போவதில்லை என்றும் அவர் மீண்டும் கர்நாடக மாநில பேச்சி சென்று விடுவார் என்றும் தெரிவித்தார்

அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டு வந்தோம், ஆனால் திமுக அரசு அதை நிறுத்திவிட்டு வெறும் 30% பெண்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கி ஏமாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை நீட் தேர்வை ரத்து செய்ய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments