Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் உடலையே சுற்றி வந்த கருடன்: தொண்டர்கள் உருக்கம்!

ஜெயலலிதாவின் உடலையே சுற்றி வந்த கருடன்: தொண்டர்கள் உருக்கம்!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (12:23 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று ராஜாஜி மஹாலில் பொதுமக்களின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டது. அப்போது பெருமாளின் வாகனமான கருடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மூன்று முறை சுற்றி வந்தது.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இவரது உடல் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலிக்கு காலை ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்ட போது பெருமாளின் வாகனமான கருடன் மூன்று முறை ராஜாஜி மஹாலை வலம் வந்தது. இதனையடுத்து பெருமாளின் ஆசிர்வாதம் ஜெயலலிதாவிற்கு கிடைத்ததாக தொண்டர்கள் உருக்கமாக கூறினர்.
 
எண் கணக்குப்படி 5-ஆம் எண் நவக்கிரகங்களில் புதனுக்கு உரியதாகும். இந்த புதனின் அதிபதி பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் இறந்ததும் 5-ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

ஈபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தும் செங்கோட்டையன்.. சசிகலா, ஓபிஎஸ், தினகரனுடன் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments