நேற்று முழு ஊரடங்கு முடிந்த மதுரையில் இன்று மேலும் 295 பேர்களுக்கு கொரோனா

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (08:52 IST)
மதுரையில் இன்று மேலும் 295 பேர்களுக்கு கொரோனா
மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததால் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 14 வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருந்தது
 
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் மதுரை மற்றும் ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறந்திருக்கும் என்பதும், அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் இதுவரை 2,667 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி  வீடு திரும்பி  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது மதுரையில் 3,199 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், மதுரையில் இதுவரை 124 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments