Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நடைபெறவுள்ள 'பார்முலா 4 கார் பந்தயம்' - தமிழ்நாடு அரசு விளக்கம்

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (15:23 IST)
சென்னையில் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயம் நடக்கவுள்ள நிலையில், இதனால் மக்களுக்கு பாதிப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது.
 
சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4  நடைபெறவுள்ளன.
 
இதுகுறித்து சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
 
‘’சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை - காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
 
மேலும், இந்தப் போட்டிக்கான டிக்கெட்-ஐ இன்று அறிமுகம் செய்தோம். இச்சிறப்புக்குரிய போட்டிக்கான பாதுகாப்பு - அடிப்படை வசதிகள் - மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த சிறப்புக்குரிய போட்டியின் வெற்றியின் மூலம் புது வரலாறு படைத்திடுவோம்’’ என்று தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், இந்த பார்முலா 4 கார் பந்தயத்தால் மக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும், கார் பந்தயத்திற்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கமளித்துள்ளது.
 
எனவே வரும் 9,10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் இந்தியன் ரேசிங் சென்னையில்  நடக்கவுள்ளதாக் ரசிகர்கள் இதைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments