Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து குவிப்பு வழக்கு..! பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (15:47 IST)
சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபதாரமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.  மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது.
ALSO READ: நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்..! வானிலை மையம் தகவல்..!!.
 
இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பொன்முடி இழந்தார்.  இதையடுத்து பொன்முடியின் வசம் இருந்த உயர் கல்வித் துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது.
 
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய மூன்றாண்டு சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடியும், அவரது மனைவியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சொத்து குறித்த முழு விவரங்களை தெரிவித்தும் அதனை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments