Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

Senthil Velan
திங்கள், 20 மே 2024 (14:28 IST)
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற கருப்பு தினேஷ். இவர் மூலக்கடையில் வாட்டர் வாஷ் வேலை செய்து வந்தார். தினேஷ் மீது வேப்பேரி, தலைமைச் செயலக காலனி ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. 
 
இந்நிலையில் தினேஷ் புரசைவாக்கம் சண்முகராயன் தெருவில் வைத்து நண்பரான ரவுடி கார்த்தி என்பவருடன் மது அருந்தி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த இமான் என்ற இம்மானுவேல் மற்றும் சிலர் திடீரென தினேஷை கத்தியால் வெட்டி விட்டு தப்பி உள்ளனர்.

தகவல் அறிந்து வேப்பேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிய தினேஷை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார்.
 
கள்ளக்காதல்:
 
போலீஸ் விசாரணையில், இமானின் மனைவியுடன் தினேஷ் தவறான உறவில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.  பலமுறை இமான் கண்டித்த நிலையில் தவறான உறவு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ: விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

இதனால் ஆத்திரமடைந்த இமானுவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தினேசை கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு வெட்டி படுகொலை செய்துள்ளார்.  மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய தப்பிச்சென்ற 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments