Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருமாள் ஏரி நிரம்பியது: ​கடலூரில் 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (19:49 IST)
கடலூரில் உள்ள பெருமாள் ஏரியிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர், வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் உள்ள 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 
வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புகுள்ளாயுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. தொடர் கனமழையால் கடலூர் அருகே உள்ள பெருமாள் ஏரி முற்றிலும் நிரம்பி விட்டது. இதனால் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட  நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணிகயை அப்பகுதி மக்களே செய்து வருகின்றனர். மேலும், இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் பணியை ராணுவ வீரர்கள் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments