Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : பிரதமருக்கு ஜெ கடிதம்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (21:37 IST)
இலங்கை சிறையில் வாடி வரும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில் "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 6 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து 12-10-2015 அன்று 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர்.
 
இதுவரை மொத்தம் 78 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 38 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
இவ்வாறு தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தும் நடவடிக்கையானது, தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிக்கும் செயல். இந்த செயலை இந்தியா அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
 
எனவே, சமீபத்தில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் உள்பட, இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments