Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றே இறைச்சி கடையில் குவிந்த கூட்டம்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (22:05 IST)
ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் கடந்த வாரம் சனிக்கிழமை மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் குவிந்தது என்பதும் அங்கு கூடிய பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் இருந்ததால் மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து தமிழக அரசு அதிரடியாக சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் இறைச்சிக் கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் மீன் உள்பட இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்பதால் இன்று வெள்ளிக்கிழமை என்று கூட பாராமல் மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொது மக்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸை வெல்ல முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments