Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – இதுவரை 7 பேர் பலி !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (15:32 IST)
சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகாசி அருகேயுள்ள சாத்தூர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பயங்கரத் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. வேகமாகப் பரவிய இந்த தீயால் ஆலையின் மொத்த தரைத்தளமும் இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 7 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் பற்றிய முழுமையான விவரம் இன்னும் தெரியவில்லை என்றும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் உயிரிழப்பு இன்னும் அதிகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைந்து வந்த தீயணைப்புப் படை தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments